tamilni 287 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

Share

வாகன இறக்குமதி! பிரச்சினைகளை தீர்க்க உடனடி தலையீடு

கடனுதவிக்கான சர்வதேச அங்கீகாரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் பாரவூர்திகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியின் அடிப்படையில் கடன் பத்திரங்களில் (LCs) எழும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக தலையிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச ரீதியில் கடன் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் உட்பட பல வகை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்குமதி செய்வது சிக்கலாக மாறியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மத்திய வங்கி உள்ளிட்ட குழுக்களுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடன் பத்திரங்களுக்கு அரசாங்க உத்தரவாதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...