இலங்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் வெடித்தது மோதல்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் வெடித்தது மோதல்!
ஹெட்டிபொலவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 72வது ஆண்டு மாநாட்டை திடீரென இடமாற்றப்பட்டு கொழும்பில் நடத்த தீர்மானித்துள்ளமையினால் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 2 ஆம் திகதி ஹெட்டிபொலவில் நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த தீர்மானம் திடீரென மாற்றப்பட்டு அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஹெட்டிபொலவில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாநாடு திடீரென இரத்துச் செய்யப்பட்டு கொழும்பில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, கொழும்பு ஹெட்டிபொலவில் நடைபெறவிருந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
மேலும், மாநாட்டை ஹெட்டிபொலவில் ஏற்பாடு செய்வதற்கு ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரண்டு தடவைகள் கூடி கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விழாவை ஹெட்டிபொலவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு, ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தும் எவ்வித அறிவிப்பும் இன்றி இடமாற்றப்பட்டமை தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப இது இடம்பெற்றுள்ளதாகவும்,கொழும்பில் நடத்துவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கொள்கையற்ற கட்சியாக மாறியுள்ளதாகவும்,சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் உள்ளதா அல்லது அரசாங்கத்தில் உள்ளதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
மேலும், கொழும்பில் நடைபெறும் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படலாமெனவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தீவிரமடையும் பதவி மோதல்! பிளவுபடும் சுதந்திரக்கட்சி - tamilnaadi.com
Pingback: கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த டலஸ் அணி - tamilnaadi.com
Pingback: புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் விளக்கம் - tamilnaadi.com
Pingback: அதிவேகப் பாதைகளில் புதிய பாதுகாப்புச்சேவை - tamilnaadi.com