அரசியல்
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த டலஸ் அணி
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த டலஸ் அணி
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய என்பவற்றுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்க எதிர்பார்த்துள்ளோம் என டலஸ் அழகப்பெரும தலைமைத்துவம் வகிக்கும் சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
தற்போது நிலவும் நெருக்கடியான நிலையை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா? இல்லையா? என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது.
மாகாண சபைத் தேர்தலுக்குத் என்ன நடந்தது என அனைவரும் அறிவார்கள்.
இந்தநிலையில், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களிலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்தார்.