நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் அபாயம்
நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக, எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப் பற்றாக்குறையை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடும் வறட்சி காரணமாக பாரிய உணவுப் பற்றாக்குறைக்குயை எதிர்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்த போதிலும் அது தொடர்பிலான தெளிவூட்டல் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
அத்துடன், உடவளவை நீர்த்தேக்கத்தின் கீழ் நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடப்பட்ட போது ஒருவாரம் கால்வாய்கள் வழியாக நீர் பாய்ந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் ஒரு வாரத்தின் பின்னரே அவர்கள் பயிர்செய்கையை பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
எனவே வறட்சியுடன் பாரிய உணவுப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.
அதேநேரம், தனிநபர்கள் உட்கொள்ளும் உணவில் பெரும்பாலானவை வீணடிக்கப்படுகின்றது.
Leave a comment