முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு நூற்றுக்கணக்கான விஐபி பாதுகாப்பு!
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு நூற்றுக்கணக்கான விஐபி பாதுகாப்பு!

Share

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு நூற்றுக்கணக்கான விஐபி பாதுகாப்பு!

நாடாளுமன்றத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் பலருக்கு தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அமைச்சர்களின் பாதுகாப்புப்பிரிவின் சுமார் நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, ஏறக்குறைய 20 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னாள் ஆளுநர்களான ஹேமல் குணசேகர, சரத் ஏக்கநாயக்க, டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் அனுராதா யஹம்பத் ஆகியோர் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தாமாக முன்வந்து திருப்பி அனுப்பப்பட்டதாக மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...