இலங்கை
தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள்
தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள்
மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச சகோதரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும ஆகியோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பாடசாலையின் தற்போதைய அதிபராக இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த மகிந்தராஜபக்சவின் நீண்ட கால ஆட்சியின் குணாதியசங்களாக குடும்ப ஆட்சி காணப்பட்டது.
நான்கு சகோதரர்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன்,பொது நிதியில் 80 வீதத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை மெல்லமெல்ல அதிகரித்ததன் மூலம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளையும் யுத்த குற்றச்சாட்டுகளையும் சந்தித்த அரை சர்வாதிகார ஆட்சியை மகிந்த உருவாக்கினார்.
மேலும் மகிந்தவின் சீனா ஆதரவு கொள்கை இலங்கையில் சீனா தனது செல்வாக்கை மிகவேகமாக பரப்புவதற்கு உதவியது.
இலங்கையின் 25 வருடகால யுத்தம் 2009 இல் முடிவிற்கு வருவதை மகிந்தராஜபக்ச மேற்பார்வை செய்தார். எனினும் அவர் சமாதானத்தின் முகவர் இல்லை என தமிழ் தரப்புக்களால் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் அதிகளவிற்கு இந்துக்களான தமிழர்கள் மீது பாரிய கொடுமைகளை இழைத்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் கதாநாயகர்களாக மாறினார்கள்.
இது பல்லின தேசமென்ற என்ற இலங்கையின் அடையாளத்திற்கு பதில் ஒரு இனத்திற்கான தேசமென்ற அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான துணிச்சலை மகிந்தராஜபக்சவிற்கு வழங்கியது.
ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய போராட்டம் இவை அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில் 18.09.2019 இல் இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபய ராஜபக்சவும், யுத்த வெற்றியை வைத்து ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி - tamilnaadi.com