இலங்கை
ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி
![ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி 1 rtjy 112 scaled](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2023/09/rtjy-112-scaled.jpg?lossy=2&strip=1&webp=1)
ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கச் செய்யச் சதி
ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே சனல் 4 தொலைக்காட்சியால் போலியான வீடியோ வெளியிடப்பட்டு வருகின்றது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று(11.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், இறுதிப் போர் தொடர்பிலும் போலியான காணொளிகளை சனல் 4 வெளியிட்டது.
தற்போதும் அவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டமை தொடர்பில் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.