இலங்கை
யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி


யாழ். மக்களுக்கு தொடருந்து திணைக்களம் மகிழ்ச்சி செய்தி
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு தொடருந்து ஒன்றை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த சொகுசு தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்துள்ளார்.
குறித்த தொடருந்து, தினமும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த தொடருந்து புறப்படவுள்ளது.
குறித்த தொடருந்தில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன.
தொடருந்தில் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login