வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல்! அதிரடி நடவடிக்கை
வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக 86 கடைகளும், இன்றையதினம் (10.07.2023) 44 கடைகளுக்கும் சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றிய வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன, இந்நடவடிக்கையின் மூலமாக இதுவரை 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022 இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment