திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்

Share

திருகோணமலையில் யானை மரணம்: தீவிர விசாரணை ஆரம்பம்

திருகோணமலை– எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததைத் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே இவ்வாறு மரணமடைந்துள்ளது.

கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்தமையும், ஊருக்குள் புகுந்து வீடுகளையும் வீட்டுத் தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் பலர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இருந்த போதிலும் யானையின் வாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், யானை உயிரிழந்தமை தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் வன விலங்கு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

யானை மரணித்தமை தொடர்பாக மிருக வைத்திய நிபுணர் சம்பவ இடத்திற்கு நாளை (06.07.2023) வருகை தரவுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் வனவிலங்கு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மொறவெவ பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...