இலங்கை
தமிழர் பகுதியில் துப்பாக்கிக்சூடு!
தமிழர் பகுதியில் துப்பாக்கிக்சூடு!
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிக்சூட்டு சம்பவம் இன்று (03.07.2023) அதிகாலை குச்சவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 21வயதுடைய இருவர் மீதே இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவத்தில் காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login