அஸ்வசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், உண்மையாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறைந்த வருமானம் பெறுவோரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மானியங்களை இழக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Leave a comment