இலங்கை
சர்வதேச முன்னணி வங்கி உயரதிகாரிகள் யாழ்பல்கலைக்கு விஜயம்!


சர்வதேச முன்னணி வங்கியான எச்.எஸ். பி.சி வங்கியின் இலங்கைக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட உயரதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர்.
எச்.எஸ். பி.சியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜ்னர், வங்கியின் பிரதம இடர் முகாமையாளர் கெலும் எதிரிசிங்க, கண்டிக் கிளையின் முகாமையாளர் கித்மல் விமலவீர, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் ஏ.சிவானந்தன் அரவிந்தன், சர்வதேச இணை வங்கிச் சேவையின் வாடிக்கையாளர் உறவுகளுக்கான முகாமையாளர் மேனகா சண்முகநாதன் மற்றும் யாழ்ப்பாணக் கிளை அலுவலர் செல்வராசா கேசவன் ஆகியோரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோருடன் கலந்துரையாடினர்.
#srilankaNews