இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கனடா விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல் !

Share

கனடா விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல் !

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயில மாணவர் விசா வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் ஆண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரும், கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 400 பேரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் ஒருவரிடம் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது

சந்தேகநபர்கள் கொழும்பு உலக வர்த்தக நிலையத்தின் 06வது மாடியில் அலுவலகம் ஒன்றை நடத்தி இந்த பாரிய மோசடியை செய்துள்ளனர்.

இந்த மோசடியில் பெருமளவான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும்  பொலிஸ் அதிகாரிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  பாதிக்கப்பட்ட மக்கள் லங்காசிறி குழுவினரிடம் முறையிட்டதன் பின்னர் விரைந்து அவ்விடத்திற்கு சென்ற லங்காசிறி குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரலையில் விசாரித்து ஒளிபரப்பான செய்தியின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...