டெங்கு நுளம்புகளை கண்டறிய ட்ரோன் கமராக்கள்!
பொது சுகாதார ஆய்வாளர்களால் (PHI) அணுக முடியாத உயரமான கட்டிடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய கட்டிடங்களில் தேங்கி நிற்கும் நீரில் இரசாயனங்களும் தெளிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மேல்மாகாண பூச்சியியல் நிபுணர் ஆயிஷா சரத்சந்திர,
நீரை அகற்ற முடியாத இடங்களில் இந்த பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த இரசாயனங்களைப் பயன்படுத்திய பிறகு, நுளம்பு குடம்பிகள் கூட அழிக்கப்படுவதோடு குறித்த இடங்களில், நுளம்புகள் திரும்பி வந்து முட்டையிடாது, எனவும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் அதிக அபாய டெங்கு நிலைமை குறையும் வரை இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு சுகாதார அமைச்சின் அலுவலகங்களுக்கும் தினசரி அடிப்படையில் ட்ரோன் கமராக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 35,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Leave a comment