இலங்கை
யாழ் ஒஸ்மோனியா கல்லூரிவீதியில் மாணவி கடத்தல் முயற்சி!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்போது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
குறிப்பாக கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்துபொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்,
#srilankanNews
You must be logged in to post a comment Login