LOADING...

வைகாசி 11, 2023

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(11. 05.2023) சடுதியாக  அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 322.70 ரூபாவாகவும், கொள்வனவு விலை 308.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 355.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

#srilankaNews

Prev Post

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிாிழப்பு!

Next Post

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி!

post-bars

Leave a Comment