இலங்கை
வடக்கின் தொன்மக் குரல் படைப்பாற்றுகைப் போட்டி!
வற்றாப்பளை கலையியல் திரைப்படப் பன்னாட்டுக் கூடத்தின் (VIIAF) ஏற்பாட்டில், இளம் படைப்பாளிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள “வடக்கின் தொன்மக் குரல்” (sites And sounds of the North) படைப்பாற்றுகைப் போட்டி – 02 தொடர்பாக ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறித்த போட்டி தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்பட்டன.
வடமாகாணத்தின் தொன்மங்களைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் கலைப் படைப்புகளுக்கு பணப் பரிசில்களும் விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
முதலாமிடம் பெறும் படைப்புக்கு 100,000 ரூபாய் பணப்பரிசும்
இரண்டாமிடம் பெறும் படைப்புக்கு 60,000 ரூபாய் பணப்பரிசும்
மூன்றாமிடம் பெறும் படைப்புக்கு 40,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
படைப்புகளை ஜுன் மாதம் 30ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு முன்பாக ahankanalikoodam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும்
தெரிவு செய்யப்படும் படைப்புகள் ஜுலை மாதம் 8ஆம் திகதி, அகங்கனலி கூடத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
படைப்புகள் ‘வடக்கின் தொன்மக் குரல் ‘ எனும் தொனிப் பொருளைப் பிரதிபலிக்கக் கூடியதான குறும்படம் ஆவணப்படம், ஓவியம், சிற்பம் போன்ற எந்த கலை வடிவமாகவும் இருக்கலாம் என்பதுடன்
போட்டியாளர்கள் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் பங்குபற்ற முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
போட்டியில் பதிவுகளை மேற்கொள்ள https://tinyurl.com/viiaf என்ற இணைப்பை பயன்படுத்துவதுடன் மேலதிக தகவல்களுக்கு 0772837127 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#srilankaNews
You must be logged in to post a comment Login