போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்தை வைத்திருந்த யாழ் இளைஞர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை ஞாயிற்றுக்கிழமை (08) இரவு 8 மணியளவில் வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளை இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் ஒருவர் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கும் யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (09) முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
#srilankaNews
Leave a comment