யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி!
திருகோணமலை – புல்மோட்டை 04 ஜின்னா நகரில் யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பம் இன்று பதிவாகியுள்ளது.
முன்னாள் தபால் ஊழியரான அப்துல்லத்தீப் அன்வர் (58 வயது) என்பவரே உயிரெழுந்துள்ளார்.
புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருகிறமையால் பல பாதிப்புகள் வரலாம் என்று மக்கள் அச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
1 Comment