தையிட்டி பகுதியில் விகாரை கட்டியமைக்கு எதிராக இடம் பெற்றுவரும் போராட்டக்களத்தில் புலனாய்வு முகவர்கள் உள்நுழைந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துவதற்கு அமைக்கப்பட்ட கொட்டகையினுள் தமிழர்கள் போல பொட்டுப் பிறைகள் என சின்னங்களை அணிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டிவரும் போராட்டகளத்திற்கு முன்னே செல்லக்கூடாது என பல்வேறு விடயங்களை கூறி அவர்களை மிரட்டி திசை திருப்ப முயன்றனர்.
இவ்வாறு திசை திருப்ப முற்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியே அகற்றினர்.இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
#srilankaNews
Leave a comment