இலங்கை
புத்தர் சிலைக்கு அடியில் சிசு மீட்பு!
வத்தேகம அல்கடுவ வீதியில் மலியதேவ குகைக் கோவிலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலைக்கு அடியில் குழந்தை கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசிகள் குழுவொன்று அதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் குழந்தையை பிரசவித்த தாய் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க வத்தேகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை குழந்தையை அந்த இடத்தில் விட்டுச் சென்றவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
You must be logged in to post a comment Login