இலங்கை
கிறீம்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
றக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை பெறுமதியான கிறீம்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிறீம் வகைகள் மற்றும் இதர பொருட்களின் பாரியளவிலான பொருட்கள் களஞ்சியசாலை மற்றும் கடையொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரால் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் இருப்பை மேற்படி திணைக்களம் கையகப்படுத்தியது.
அத்துடன், நுகர்வோரை தவறாக வழிநடத்தி சந்தைக்கு வெளியிடும் வைகயில் லேபிள்களை ஒட்டுவதற்கும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
அவை வெளிநாட்டு பொருட்கள் எனவும் அவற்றின் தரம் அறியாமல் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் பெண்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login