சிலாபம் மாரவில நீதிமன்றத்தின் பெட்டகத்தில் இருந்த 22 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் பணிப்புரியும் பெண் உட்பட இரண்டு ஊழியர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளதாக மாரவில நீதிமன்ற பதிவாளர் சாகரிகா மானேல் விக்ரமசிங்க கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பெட்டகத்திற்கு பொறுப்பாக ஒரு ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பதிவாளர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்தில் பணிப்புரியும் சில ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், பெட்டகத்திற்கு பொறுப்பாக இருந்த ஆண் ஊழியரையும் பெண் ஊழியரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#srilankaNews
Leave a comment