PdfhQNQO2XiJXgKXJhKG 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டது!

Share

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.

அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவனம் செய்யுமாறும் கேட்டு யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மார்ச் 27 ஆம் திகதி கடிதமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...