ZdyhY8HZsV1B7iPde0CA 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

Share

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டும் பகுதியில் இருந்து வெடிக்காத குண்டு காணப்பட்டதாக வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்த நகர் பகுதியில் குடியிருப்பதற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைக்க வீட்டார் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11ம் திகதி வீட்டுக்கான அத்திவாரம் தோண்டும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றுவரை குறித்த குண்டு அகற்றப்படாமையால் வீட்டு உரிமையாளரும் அப்பகுதி மக்களும் அச்சம் வெளியிடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முறைப்பாட்டினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட போதிலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...