தீயணைப்பு வாகனத்தில் சிக்குண்ட தீயணைப்பு வீரர் மருத்துவமனையில்!.
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
தீயணைப்பு வாகனம் ஹான்ட் பிரேக் போடப்படாமல் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில் வாகனம் மெது மெதுவாக நகரவே அதனை கண்ட தீயணைப்பு படை வீரரொருவர் அதனை நிறுத்துவதற்காக கல் ஒன்றை சில்லுக்கு முன்பாக வைக்க முயன்றுள்ளார். இதன்போது சில்லுக்குள் அகப்பட்டு காயமடைந்தார்.
காயமடைந்த தீயணைப்பு படை வீரர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment