ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரசாங்க பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 49.50 சதவீதம் திறைசேரியிடம் உள்ள நிலையில், லங்கா ஹொஸ்பிடல்ஸின் பங்கு மூலதனத்தில் 51.34 சதவீதம் அரசாங்கத்தின் சார்பாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த தீர்மானத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment