பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு வெளிநாடு சிக்ரெட்டை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகரெட்டை வாங்கிய பொழுது அது வெளிநாட்டு சிகரெட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடையை சோதனை செய்த பொழுது அங்கிருந்து மூன்று பெட்டி வெளிநாட்டு சிகரெட் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம், காரைநகர் ஊரி பகுதியில் இடம்பெற்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளரே ( வயது – 30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை ஊறுகாவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#sriLankaNews
Leave a comment