இலங்கை
போராட்டத்தில் குதித்தன தொழிற்சங்கங்கள்!!
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல தொழிற்சங்கங்கள் இன்று(15) பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக
வங்கி வட்டி வீதத்தை குறைத்தல்
20000 ரூபாய் வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல்
மின்சார கட்டணத்தை குறைத்தல்
ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல்
ஆகியன முன்வைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏழாவது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தலைவர் வி.விஜயகுமார் கோரியுள்ளார்,
தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் தலைவர் எஸ்.மதிவாணண் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சேவையில் ஈடுபட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login