அரசியல்

விரைவில் படகுகள் கண்காணிப்பு செயல்முறை

Published

on

நாட்டில் பயன்பாட்டில் உள்ள அனைத்து பல நாள் மீன்பிடி படகுகளுக்கும் ”படகுகள் கண்காணிப்பு செயல்முறை” (VMS – Vessel Monitoring System)  வி. எம். எஸ் செய்மதி தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த வருட இறுதிக்குள் 4,200 படகுகளுக்கு வி. எம். எஸ் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடை க்கான  வினா நேரத்தில்  அரச  தரப்பு  எம்.பி திருமதி கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்வி க்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள பல நாள் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அவற்றில் செய்மதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்  கோகிலா குணவர்தன எம்.பி   கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நாட்டில் தற்போது 5,000 பல நாள் மீன்பிடிப் படகுகள் பாவனையில் உள்ளன. அவற்றில் 3,700 படகுகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்திட்டத்தின் மூலம் 4,200படகுகளுக்கு வி. எம். எஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளதுடன் அதில் 3,075 படகுகளுக்கு அதனைப் பொருத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் படகுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version