image e07834ef95
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு – ஆண்களும் பாலியல் தொழிலில்

Share

இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின்  பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள்  20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானி்க்கப்படுகிறது.

பெரும்பாலும் 20 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரை இவர்களுக்கான  கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் சுமையினால், தான் இந்தத் தொழில்துறைக்கு வர நிர்ப்பந்திக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். அழைப்புகள் மற்றும் சேவையைப் பொறுத்து ரூபா 15000 முதல் ரூபாய் 50000 வரை தான் பெறுவதாகவும் இந்தத் துறையில் விரைவாக பணம் சம்பாதிக்க முடிவதால் அதைத் தனது குடும்பத்திற்கு தர முடிவதாகவும், தான் எப்படியும் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்படுவதாகவும் 22 வயதான பாலியல் தொழிலாளி தெரிவித்தார்.

ஆண்களோ அல்லது பெண்களோ பாலியல் சேவைகளை வழங்கும் இணையத்தளங்களைச் செயற்படுத்துவது சட்டவிரோதமானது.  மேலும் அது இரு தரப்பிலும் பரஸ்பரமாக ஒருமித்த  தொடர்பாக இருப்பதாலும் சட்டபூர்வ பணப்பரிமாற்றம் நடைபெறாததாலும் இந்த வர்த்தகத்தை அடையாளம் காண்பது இலகுவானதல்ல என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட ஒரு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்படாதவிடத்து  விசாரணைகளை மேற்கொள்ளவோ மேலதிக தகவல்களைப் பெறவோ முடியாதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...