உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! வெளியான குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆட்டிறைச்சி எலும்பு  சிக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு!

Share

ஆட்டிறைச்சியின் எலும்பு  சிக்கியதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்தார்.தென்மராட்சி – மட்டுவில் தெற்கை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தயான லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

.திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தப் பெண், கடந்த 25ஆம் திகதி ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சியின் எலும்பு துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிவிட்டது.

மறுநாள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்றுள்ளார். அவருக்கு வாய் வழியாக கமெராவை செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால், இதற்கு உடன்பட அந்த பெண் மறுத்து வீட்டுக்கு சென்றுள்ளார் என்று தெரிய வருகிறது.

இந்த நிலையில்,   திங்கட்கிழமை அந்தப் பெண் இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இறப்பின் பின்னர், கமெரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே இரத்த வாந்தி என்று மருத்துவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை நேற்று (08) செவ்வாய் நடத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கனமழை
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கிழக்கிலிருந்தான அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும்...

aswesuma 6 1
இலங்கைசெய்திகள்

முதியோருக்கான டிசம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு: நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக்...

images 7 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்திற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு: டிசம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது!

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டின் தற்போதைய அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாளையும் (18) நாளை...

25 693893d136522 md
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு: சிறப்பு விமானம் இலங்கை வந்தடைந்தது!

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன்...