சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு இன்று (07) நம்பிக்கையான செய்தி கிடைத்துள்ளது.
பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை நிதி உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1, 2022 அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மார்ச் 20 அன்று IMF நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக பரிசீலிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இலங்கை விரும்பிய விரிவான நிதி வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
#SriLankaNews
Leave a comment