இலங்கை

மின் கட்டண உயர்வு – சட்ட நடவடிக்கைக்கு இறங்குகிறார் ஜனக

Published

on

தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை குறித்து எதிர்வரும் இரண்டு நாட்களில்  தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தனது அலுவலகத்துக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

30 முதல் 90 வரையிலான மின்சார அலகுகளைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் மக்களுக்காக மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டணமானது 250 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நீதியை பெற்றுத் தருவதற்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி நீதிமன்றத்துக்கு செல்வதாக தலைவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக பல நாட்களாக வெளிநாட்டுக்கு சென்ற தாம் நாடு திரும்பிய போதும் தனது அலுவலகம் தனக்காக திறக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அவர் அலுவலகத்துக்கு வருகை தந்த போது, அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட வில்லை என்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு பின்னர் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version