foods
இலங்கைசெய்திகள்

பாவனைக்கு தகுதியற்ற உணவுகள் – உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை

Share

இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில்,

“இலங்கையில் தற்போதுள்ள 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 27% சராசரி நிலையிலும் மற்றும் 55% மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன.

இலங்கையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், 2022ம் ஆண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவு வெளியிடப்படுகிறது.

தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55% மும், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27% மும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளன.

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்று தேவைப்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.- என்றார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...