ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்!!!

Share

நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் யானை – மொட்டு கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் எனவும், அதுமட்டுமல்லாமல், இந்நாட்களில் பணம் செலவிட்டு சமூக ஊடகங்களில் போலியான அலைகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற மற்றுமொரு குழு செயற்பட்டுவருவதாகவும், அவர்கள் குறித்தும் மக்கள் கவனம் செலுத்தி குறித்த அலைகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருக்குமாறும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மக்கள் மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராகவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தாம் புறக்கணித்ததாக தெரிவித்த அவர், மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம் எனவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமெனவுமே யானை மொட்டு அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும், இந்த யானை மொட்டு அரசாங்கத்தை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் ராஜபக்சவின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர் எனவும், இதுபோன்ற தருணத்தில், மக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டைப் போல போலிகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும், சமூக ஊடகங்கள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் சமூக ஊடக அலைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் வாழவைக்கும் பொது யுகத்துக்கான ஆணையை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 தேர்தலை நடத்தாதிருக்க முயற்சிக்கின்றனர் என்பதனால், அக்கிராசன உரையையோ, நாடாளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...