அரசியல்
வரிக் கொள்கைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்!
தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நியாயமான முறையில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கண்டிக்குச் சென்ற கரு ஜயசூரிய மதவழிபாடுகளில் ஈடுபட்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்போது தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், உள்ளூராட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெறப்போவதில்லை. எவ்வாறாயினும் ஒரு தரப்பினர் தேர்தலுக்கு நிதியில்லை எனக் கூற மற்றொரு தரப்பினர் தேர்தலை நிச்சியமாக நடத்தியே ஆக வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்தார்.
எனினும், பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகிறார்கள். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டம் என்பது எமது அரசியலமைப்பில் உள்ள ஒரு பகுதி. எனினும், இதனால் நாடு பிளவுப்படும் என்கிற சந்தேகம் மாநாயக்க தேரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, பாராளுமன்றத்தில் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login