Omalpe Sopita Thera
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும்!

Share

வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ​தொடர்ந்து உரையாற்றிய அவர், என்னிடம் உடையில்லை என்பதற்காக வேறொருவரின் உடையை அணிந்துகொள்ள முடியுமா? எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குக் கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் அதிகளவான பணத்தை செலவிட்டு சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டுமா? இதற்கு பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...