75வது தேசிய சுதந்திர தின விழா மற்றும் அதற்கான ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இயலுமானளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, இந்த காலப்பகுதியில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஒத்திகை காலப் பகுதியிலும் சுதந்திர தின நிகழ்வு இடம்பெறும் 4 ஆம் திகதியிலும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
சாரதிகள் தடையின்றி பயணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். கொழும்பு நகரம் முழுவதும் தேவையான போக்குவரத்து அதிகாரிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். இயலுமான வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள்.
#SriLankaNews