தமிழ் அரசியல் கைதிகள் மூவர், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவரும் விடுவிக்கப்பட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment