இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இலங்கை மின்சார சபை செயற்படத் தவறியமை தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இன்று (28) தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைக் காலத்தில் தொடர்ச்சியான மின்சார விநியோகம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வலுச்சக்தி அமைச்சின் எந்தவோர் அதிகாரிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கிருந்த மேலதிக செயலாளரிடம் சட்டம் குறித்து விளக்கியதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலுக்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக செயலாளர் ஒருவரின் பங்கேற்பே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment