ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் – ஜனாதிபதி நாளை பேச்சு

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முதலாவது பேச்சு, ஜனாதிபதி செயலகத்தில் நாளை (13) செவ்வாய்க்கிழமை மா​லை 5.30க்கு நடைபெறவுள்ளது.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில், ஜனாதிபதியால் ஏற்கெனவே, விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு அமையவே முதலாவது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிதிகள் பங்கேற்கவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய இனப்பிரச்சினைக்கு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வுகாணும் வகையில், பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டுமென 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் மீதான உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...