இலங்கை
மேலும் ஒரு இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடை
இலங்கையின் மற்றுமொரு இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
உலகளாவிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் சமீபத்திய நடவடிக்கையாக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைவர் மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு, இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தது.
2020 ஆம் ஆண்டில், முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் படைகளின் பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா மீதும் அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல்: விசாரணைக்கு இரு குழுக்கள் - tamilnaadi.com