கிளிநொச்சி பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதங்களால் நபர்களை தாக்குதல், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், மோட்டார் சைக்கிள்களை திருடுதல், பணத்தை கொள்ளையடித்தல் போன்ற குற்றச்செயல்களில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அக்கராயன்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment