01 HIV AIDS
இலங்கைசெய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்கள்

Share

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் ஒப்பீட்டளவில் பெண்களை விட ஆண்களுக்கே வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாகவும், தொற்றாளர்களில் 20 ஆண்களுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பதிவாகியுள்ளதாகவும், இளம் வயதினரிடையே இந்த அதிகரிப்பு காணப்படுவதாகவும் இலங்கை பாலியல் சுகாதார மற்றும் எச்.ஐ.வி மருத்துவ நிபுணர் விசேட வைத்தியர் மஞ்சுளா ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் .

உலக அளவில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 38.4 மில்லியனாகும். கடந்த ஆண்டில் மாத்திரம் 1.5 மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவானதாகவே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 410 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 429 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 600 ஆக பதிவாகலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் மூலமாக ஏனையோருக்கு வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. அத்துடன் நீண்டகால மருத்துவ சிகிச்சைகளை பெற்றாக வேண்டும். மேலும் வெறுமனே உடலுறவு மூலமாக மட்டுமே எச்.ஐ.வி வைரஸ் பரவும் என கருதக்கூடாது. இரத்தம் மூலமாகவும் பரவும். எனவே இரத்ததானம் செய்யும் வேளையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தாயிடம் எச்.ஐ.வி தொற்று இருக்குமானால் பிள்ளைகளுக்கு கடத்தப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்தார். எனினும் இலங்கையை பொறுத்தவரையில் தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்று கடத்தப்படாத நாடக இலங்கை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...