1665581700 ranil 2
இலங்கைசெய்திகள்

ஆபத்தின் விளிம்பில் மனித இனம்!

Share

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் அந்த விடயத்தில் நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘கோப் 27’ உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே ‘கோப் 27’ மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது, காலநிலை தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் என்பதுடன், ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில், ‘கோப் 28’ இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பட வேண்டுமெனவும் , அவ்வாறு இல்லாவிட்டால், ‘கோப்’ அமைப்பை கலைப்பதே சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...