விலைகளை குறைத்தது சதொச

1617610630 sathosa 2

லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வௌ்ளைப்பூடுவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 495 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 43 ரூபாவினால் குறைக்கப்பட்ட 255 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version