Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை மாற்ற முயற்சித்தால் அவசரகாலசட்டத்தை பயன்படுத்துவேன்! – ஜனாதிபதி எச்சரிக்கை

Share

அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை பயன்படுத்தி அல்லது அவசரகாலசட்டத்தை நடைமுறைப்படுத்தியாவது அதற்கு இடம் தரப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் எவருக்கும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த முடியும். வீதியை நெருக்கடியை ஏற்படுத்தாமல், ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும்.

எனினும் அதற்காக பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...