நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரசாயன உரம், கிருமிநாசினி விலை உயர்வாலும் தொடர்ந்து மூன்று, நான்கு மாதங்களாக பெய்த மழையினாலும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்களும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. அதிக விலை கொடுத்து மரக்கறிகள் கொள்வனவு செய்வதற்கும் மரக்கறிகள் தேடி அலைய வேண்டியிருப்பதாகவும் அவ்வாறு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு விற்பனை செய்வதற்கும் முடியாமல் இருப்பதாகவும் நுவரெலியா மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment